உடைந்த சூரியன் நான்,,,,,
எனக்கான எல்லா நிமிடங்களும்
தோற்றுப்போகிறது என்னைப்போலவே,
புதிய புதிய
பக்கங்களைப்புறட்டுகிறேன்
ஒன்றுமே எனக்காய் பூத்ததில்லை.
எந்தப்பாதையிலும் எழுதிவைத்ததில்லை
எனக்கான விலாசத்தை,
எழுதியவனும் எங்கேயோ
நான் கண்டதில்லை.
இருள்கள் விழுங்கிய ஒரு நிலவு
மேகத்தை உடைத்து வெளிவருவதை
கானும் போதெல்லாம்,
மீண்டும் எனை
தனிமைப்படுத்திக்கொள்வேன்,
தாயின் கருவறை நாட்கள் போலவே.
எத்தனை முறை மனிதன்
உயரப்பறந்தாலும்,
என்றாவது ஓர் நாள்
வீழ்ந்துதானாகவேண்டும்.
பூமி அவனின் வருகைக்காய் என்றுமே ,,,,,,,,,,,