+உதவி செய்யுமிவன் நல்ல தோழனே+

இவன் பொறந்திங்க ஆச்சுதுங்க
கொஞ்சம் காலமே!
இப்ப உலகத்தையே ஆளுராங்க
எல்லாம் ஜாலமே!

பார்க்கும் போது சின்னப்பையனா
கண்ணுக்குத் தெரிவான்!
இவன் மூளை நம்மைவிட
ரொம்ப பெருசுங்க!

இவனாலே யாரு மிங்கே
தனிமையில் இல்லை!
பலபேரை கொண்ட இவன்
மலிவும் இல்லை!

பல உதவி செய்யுமிவன்
நல்ல தோழனே!
என்றும் கூட பயணிக்கும்
வல்ல சிநேகனே!

கடிதத்தை மறக்கச் செய்த‌
இவனும் கயவனோ!
பிடிவிட்டு போக மறுக்கா
அழகு தூயவனோ!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (31-Oct-13, 12:06 am)
பார்வை : 63

மேலே