முரண்

முரண்

தூப நதிக்கரை மறைவிலே
குறுங்கீற்றுகளென ஆடும்
தேவதைச் சிறகுகளெல்லாம்

இரசனையற்ற புலன்களி லிருந்து
தள்ளித் தள்ளியே போகிறது

கவிதைக்கென எடுத்த விதைகளை
காட்சிப் பேழையில்
சிறைப்படுத்திய மனோவியாதியிலே
சுற்றித்திரியும் கூட்டுத் தொடர்கள்

கரைய மறுக்கும் மண்கூடுகளில்
மறைய துடிக்கும்
மழைநேரக் கற்பனைகள்

அமைதி தொலைத்தப்
பார்வைகளெல்லாம்
அரவணைக்கத் துருவிடும்
அசைகின்ற மரக்கிளைகள்

குறுக்கப்பட்ட சதைதனிலே
நெருக்கப் படுகின்ற
முரலோசைக் கடிவாளங்கள்

தொடக்கப் பிழைச் சுவடிகளிலே
தேரா நெடுங்கணக்கின்
வினையடை வாதமுறைகள்

செய்தித்தாளில் இடமடைத்த
முன்னெச்சரிக்கை
கம்பலைகளென எல்லாமே

ஒட்டா திரள்
உண்டிச் சாலை
உணவுப் பாயல்களாக

அனுசரன்

எழுதியவர் : அனுசரன் (31-Oct-13, 4:44 pm)
பார்வை : 84

மேலே