நாகரீக பறவைகள்
கூடு கட்ட குடிசை இல்லை,
இடம்பெயர்ந்தோம் - அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு!!
விளையாட மரங்கள் இல்லை,
கற்றுகொண்டோம் - மின்சார கம்பிகளில் ஆபத்துடன் விளையாட!!
வயிறார உண்ண வயல்வெளிகள் இல்லை,
மாற்றிகொண்டோம் - உணவு பழக்கத்தை துரித உணவு சாலைகளுக்கு!!
எங்களை கடிதம் அனுப்ப பயன்படுத்திய காலம் மாறி,
வேவு பார்க்க அனுப்பி விட்டீர்கள்!!
முன் எங்களுக்கு கண்களுக்கு தென்படும் எதிரிகள், இன்று கண்ணில் புலப்படா எதிரிகள்(கதிர்வீசி)...
ஓ இதுதான் அறிவியல் வளர்ச்சியோ?
மனிதா நீ சுகம் அனுபவிக்க எங்கள் வாழ்க்கை சுமையாகிவிட்டதே!!!
ஒன்றை இழந்தால் தான் மற்றொன்றை பெறமுடியும் என்பார்கள்,
வாழ்வை இழந்தது நாங்கள், அனுபவித்து எல்லாம் நீங்கள் மட்டுமே!!!