சிவப்பு கங்கை

உதவிக்கு கரம் கொடுக்கலாம்
உதவிக்கு பணம் கொடுக்கலாம்
பசிக்கு உணவு கொடுக்கலாம் .
உயிருக்கு இரத்தம் கொடுங்கள் !

பாசிடிவ் நெகடிவ் இரத்தத்தில்
எத்தனையோ பிரிவுகள்
உங்கள் பிரிவு இரத்தத்தை
ஒவ்வொருவரும் இரத்த வங்கியில்
தானமாகத் தாருங்கள் !
அவசர சிகிச்சையில் மருத்துவ விடுதியில்
உடனடியாக அது உதவும் ; உயிரைக் காக்கும் !.

இரத்தம் தானம் கொடுத்தால்
சில மணி நேரங்களில் ஊறிவிடும்
அறிவியல் கூற்று !

இரத்தம் உடலில் ஓடும் சிவப்பு கங்கை
வற்றுவதில்லை ;இறைவன் கொடுத்தது .
உள்ளம் உங்களுடையது தயக்கம் ஏனோ ?

தானமாய் இரத்தம் தந்துவிட்டால் குறைந்துவிடாது ! மாறாக ஊறிடும் !
மலர்ந்து சிரிக்கும் சில உள்ளங்கள்
உங்கள் உதவிக் கரத்தால் !

~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (31-Oct-13, 10:38 pm)
Tanglish : sivappu kankai
பார்வை : 1013

மேலே