அழகு தேவதை
மல்லிகையே! மல்லிகையே! நீயும் மணக்கிறாயே
அவள் கூந்தல் சூடியதும்!
புல்லே! புல்லே! தீண்டி விடாதே!
அவள் பாதம் நோக!
அன்னமே! அன்னமே! பின்னே போகாதே
அன்ன நடை அவளுடையது!
தென்றலே! தென்றலே! தீண்டாதே
தென்றல் தீண்டும் மலரல்ல இவள்!
மழையே! மழையே! பெய்யாதே
மின்னியது என்னவளின் இடையழகு!
நிலவே! நிலவே! உன்னைப்போல்
இவளுக்கு தேய்பிறை இல்லை!
வானமே! வானமே! விழிப்பது என்ன?
அந்த நிலவு இன்னும் வரவில்லை!
தேனே! தேனே! உன்னைப்போல் நூறு மடங்கு
மழலை பேசும் மங்கைபேச்சி!
முத்தே! முத்தே! நீ கடலுக்குள்
அவள் என் மனசுக்குள்!
அன்பே! அழகு தேவதையே! நேசிப்பது
உன் அழகைஅல்ல மனசை!