எங்கே போகிறாய் என் அன்பு தமிழா ?

பட படக்கும் பட்டு பாவாடை,
மடித்து கட்டிய மல்லு வேட்டி
கொசுவம் சொருவிய புடவை
இவையெல்லாம் தமிழரின் அடையாளம்

ஆம், ஒரு காலத்தில் ..

விஞ்ஞானத்தின் விதைகள்
பூமி தொடும் முன்னே
முப்போகம் விளைவித்த
வம்சம் நாம்.

உலகத்தின் வரைபடம்
வரைவதற்கு முன்பே
பல்கலைகழகம் அமைத்து
பாடம் சொன்னவர்கள் நாம் ..

ஒரு கூட்டு பறவைகளாய்
ஒன்று கூடி வாழ்ந்து
உலகம் போற்றும் காவியங்கள்
உருவாக்கி பரிசளித்தவர்கள் நாம்,

கூட்டு குடும்பங்கள் நமக்கு
கற்று தந்த பண்புகள் எத்தனை ?

அம்மாவின் நிலா சோறு திங்க
நாள் முழுவதும் தவமிருந்தோம்
அப்பாவிடம் அடிவாங்கியாவது
ஐஸ் வாங்கி சுவைத்தோம்

பாட்டியின் கதைகள் கேட்டு
பண்புகள் வளர்ந்தோம்
தாத்தாவிடம் சிலம்பமும்
மல்யுத்தமும் கற்றோம் ..

மாமாவின் தோள்மேல் ஏறி
யானை சவாரி செய்தோம்
அத்தையின் முந்தானை பிடித்து
அன்பினை பகிர்ந்தோம் ..

ஆத்தங்கரை ஓடைமேல் இருந்த
ஆலமர விழுதுகளில் தூளி கட்டி ஆடினோம்,
அய்யனார் கோவில் திருவிழாவில்
ஆட்டம் போட்டோம் நண்பர்களுடன் ,,,

எத்தனை அழகான நாட்கள் ,,,,,

ஆனால் இன்று ...

தாயின் தாலாட்டை மறந்து
தலைமுறை கடந்து விட்டோம்
அப்பாவின் உண்மையான அன்பை
அறவே தொலைத்து விட்டோம்

"அன்புள்ள அப்பாவிற்கு" என்று
ஆசையுடன் எழுதிய கடிதங்கள்
அருங்காட்சியக அறைக்குள்
அடைபட்டு கிடக்கிறது ..

அத்தை மாமா உறவுகளே
அறிந்திராத தலைமுறை
அடுத்தவீட்டு அன்பரின்
பெயர் கூட அறிந்திராத
அடுக்குமாடி கலாச்சாரம் ,,

தைத்தும் தைக்காத ஜீன்ஸ்
அங்கங்கள் அழகை கட்டும்
இருக்கமான உடைகள்

அன்பை கூட பண்பலையில்
பகிர்ந்து கொள்ளும் பரிதாபம் ..

அன்பு மட்டுமே நிறைந்த
நாம் இல்லங்கள் - இன்று
தொலைகாட்சியின் தொல்லைகளால்
நிரம்பி வழிகிறது ...

எங்கே பார்த்தாலும்
விஞ்ஞானத்தின் விஸ்வரூப வளர்ச்சி
பெருமை கொள்கிறோம்
நாகரிக மற்றம் என்று

மார்தட்டுகிறோம் வளந்துவிட்டோம் என்று..
மறந்து விட்டோம் நம்மில்
இறந்து போன மனித உணர்வுகளை

எந்த ஒரு வளர்ச்சியும்
மனித உணர்வுகளை மாற்ற முடியாது ..
நமக்கு நாமே வெட்டி கொள்ளும்
சவக்குழி இது..

பயிரிட்ட நிலங்களின்
உயிர் பறித்து விட்டோம்
அன்றாட தேவைக்கே அடுத்த தேசம்
கையேந்தி நிற்கும் அவல நிலை,

ஏன் ஏன் ஏன் ?

நாம் கடந்து வந்த பாதைகளை
மறந்து போனது தான் ..
புதிதாய் ஏற்பதாக நினைத்து
சொந்த அடையாளங்களை தொலைத்ததுதான் ...

எந்த நாகரிகமும் ஏற்போம் ஆனால்
நாம் நாகரிகமே உயிரே கொள்வோம் ..
எம் மொழியும் கற்போம் ஆனால்
நாம் மொழியே உயர்வென கொள்வோம்.

பாடங்களுக்கு நடுவே கொஞ்சம்
பாசத்தையும் கற்று தருவோம் ..
கணினி கற்கும் போதும் கொஞ்சம்
கருணை சொல்லி தருவோம் ..

இது யார் பொறுப்பு ?
யாருமே இல்லை ... ஆம்
எல்லோரும் பொறுப்பு .. எல்லோருக்கும் பொறுப்பு ,,,

இல்லையென்றால் ....

கழனி கண்டு உழவு கொண்டு
முப்போகம் விளைச்சல் கண்டு
யானை கட்டி போரடித்து
கூடி நின்று உணவளித்து ..

அன்பில் வீடு கட்டி
அறிவில் உலகையே ஆண்டு
கூட்டு குடும்பங்களை கூடி வாழ்ந்து
அறிய பல இலக்கியங்கள் கொண்டு

இயற்க்கை தாயின் தாலாட்டில்
தலை அசைத்து இசை அமைத்து
தாய் மொழி வளர்க்க
செம்மொழி மாநாடு கண்டு

வாழ்ந்த வம்சம் நம்
தமிழ் வம்சம் என்று.

ஆங்கிலத்திலும் கணினி கல்வியிலும் ..

எழுதியவர் : ஆதவன் (17-Jan-11, 2:47 pm)
சேர்த்தது : ஆதவன்
பார்வை : 738

மேலே