ஆச்சர்யம் பாருங்கள்…

ஆச்சர்யம் பாருங்கள்…!

ஆச்சர்யம் பாருங்கள்
கண் முன்னே
பூமி சுற்றுவதை
காண்கிறேன்
அருகில் இருக்கும்
மனிதர்கள் கூட
அங்கும் ஆடியபடி
இருக்கிறார்கள்
ஊர்ந்து செல்லும்
வாகனங்கள் கூட
ஆடியபடி நகர்கின்றன

நான் மட்டும்
எப்படி இப்படி
உறுதியாய் நின்று
கொண்டிருக்கிறேன்?

உரசியபடி சென்ற
ஒருவர்

“எருமை மாடு”
காலையிலேயே
தண்ணிய போட்டுட்டு
மறிச்சு நிக்கறான்
கடிந்தபடியே சென்று
கொண்டிருக்கிறார்

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (21-Oct-24, 10:41 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 4

மேலே