எரிதழல்

இருண்டது போதுமென
எரிந்தெழுந்தான் பகலவன்
பூமி புலர்ந்தது!

வெந்தது போதுமென அதிர்ந்தது
மேகம்,
குளிர்ந்தது பூமி!

அமுங்கியது போதுமென முளை
முளைத்தெழுன்தது.
பூமி பிளந்தெளுந்து கிளை பரப்பி
ஆல் விரிந்தது!

அமுக்க அதிகரிப்பில் பாறை பிளக்கும்
பசும் வேர்!
நீரின் இறுக்கம் அணை உடைக்கும்
நீர் பெறுகி நிலம் அழிக்கும்
நிலம் அழுந்த பிளக்கும் பூமி
அணு அழுந்த அண்டம் பிளக்கும்

ஆமாம்!

அழுத்த அழுத்த ஒரு நாள்
அடிவயிற்று எரிதழல் வெளித்தெரிக்கும்
பின் வெண்சாமரம் வீசி பயனில்லை
வெந்து தீர்வதே விதியாய் போகும்!

எழுதியவர் : thivyakumaran (1-Nov-13, 4:48 pm)
பார்வை : 234

மேலே