எட்டாப் பழமென்று எதுவுமில்லை

முயற்சி எனும் ஏணிகொண்டு
முழுமையான யுக்திகொண்டு
எண்ணிப் பறிக்க நினைத்தால்
எட்டாப் பழமென்று எதுவுமில்லை..!

மழைக்காலப் பழங்கள் புளிக்கும்
வெயில்காலப் பழங்கள் இனிக்கும்
காலநிலை மாற்றமே அன்றி
புளிப்பது ஒரு சில பழத்தின்
என்றுமுள்ள நிரந்தர குணமல்ல .......!

சுயங்களைத் தொலைத்து
கால்களில் விழுந்து
பணிவிடை செய்தால்
எல்லாம் பழமும் எட்டுமே
மாயமென்று எதுவுமில்லை.....!!!!!!!

எழுதியவர் : சுசானா (வீரம்) (1-Nov-13, 5:21 pm)
பார்வை : 333

மேலே