தீபாவலிளி
என்னவளே,
அருகே இருப்பவர்கள் எல்லாம்
மத்தாப்பும் புது கடையில் துணியும் எடுத்து விட்டார்கள்
நம் எப்போ போலாம் என்று நீ கேட்க
" போகலாம் எல்லோரும் மருந்த குடிசுட்டுன்னு"
நான் கோபமாக சொல்ல "
உனக்கு எதுக்கிய பொண்டாட்டி" என் நீ கேட்டு விட்டு
தாரை தாரையாய் கண்ணீரை நீ சிந்தி,
மூக்கையும் சிந்தி கதவோர ஜன்னலில்
தலைசைத்து முக்கலும் முனகலுமாய் .......
நீ அழுது விடுகிறாய் நான் ??????
எனக்கு மட்டும் என்ன ஆசையா ?
இப்படி உன்னை அழ வைக்க......
காரணம் சொல்லி தப்பி விடலாம்
பணக்காரனாக இருந்திருந்தால்......
சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலையில்
விபத்து பலியானவர்களுக்காக
கொண்டாடவில்லை என்று
நானோ இல்லாதவன் என்ன செய்வேன் ?
ஆசைதான் எனக்கும்,
எல்லோரையும் போல தீபாவளி கொண்டாட.....
வட்டிகாரனும் வாடகைகாரனும் விட வேண்டுமே
வரும் போனசோ போக்கிடம் தெரியமால்
போகத்தான் போகிறது
முதலாளியிடம் வாங்கிய முன் பணமோ
வண்டிக்கு வாங்கிய தவணைக்கே சரியாகி விட்டது
என்னவளே புரிந்து கொள்ளடி நம் நிலைமையை.....
இன்னும் இரண்டு நாள்தான் இருக்கு தீபாவாளிக்கு?????
கையாலகாத தகப்பன் என்று இவனுக்கு
எதுக்கு பிள்ளைகள் என்று ஏசி விடுமோ என் பிள்ளைகள்......
என்னை கட்டிய பாவத்திற்கு உன்னைத்தான் கேட்குமோ
எதுக்கும்மா என்னை பெத்த என்ற,
கேள்வியின் பயம் ஒவ்வொரு தீபாவாளிக்கு,
என்னவளே ….
உன்னை போல அழுவதற்கு கூட, எனக்கு
இங்கு ஆண் என்ற விதி முறை இருக்கு.......
நானும் வாழ்க்கையையும் பிறப்பையும்
ஏசி கொண்டேதான் இருக்கிறேன்
காட்டில் வழி தவறிய மான் குட்டியை போல
சத்திரத்தில் தூங்கும் வழி போக்கர்களை போலவே
பயத்துடனே எதிர் கொள்கிறேன்
ஒவ்வொரு தீபாவ(லி)ளியையும் .......