இலங்கையின் இசைக்குயில் இசைப்ரியா
![](https://eluthu.com/images/loading.gif)
இதயம் நின்றது ஒரு நொடி
இலங்கையின் இசைக்குயில்
இசைப்ரியாவின் முடிவினை
இன்று நான் கண்டவுடன் !
இதயமே இல்லாத சிங்களவர்
இரத்த காட்டேரிகளின் செயலது !
இங்கிலாந்து தொலைக்காட்சி
இன்று வெளியிட்ட காட்சியது !
இசையாலும் நடிப்பாலும் தமிழரின்
இதயங்களை ஈர்த்திட்டது இக்குயில் !
இதயத்தில் வாழ்கின்றார் நிலையாய்
இன்னிசை இளவரசி இசைப்ரியா !
இரக்கமே இல்லாத ராஜபக்க்ஷே
இலங்கை நாட்டின் ஹிட்லர் அவன் !
இறுதிப் போரில் தமிழர்களை கொன்ற
இலங்கைத் தீவின் இடிஅமீன் அவன் !
இசைப்ரியாவின் கற்பை சூறையாடி
இன்னும் அடங்கிடா வெறியினால்
இழுத்து சென்று இன்னுயிர் பறித்தும்
இரத்தமும் குடித்தனர் சிங்கள மிருகங்கள் !
இன்றைய காட்சி இதயத்தை துளைத்தது
இனப்படுகொலை காட்சிக்கு சாட்சியானது !
இசைப்ரியாவின் இழப்பால் துவங்கியது
இனவெறியன் ராஜபக்க்ஷேவின் இறுதிகாலம் !
இசைக்குயிலின் குடும்பத்திற்கு ஈரவிழியுடன்
இந்த தமிழனின் அனுதாபம் அலைஅலையாய் !
இலங்கையில் தனிஈழம் மலரும் நாளும்
இனிமேல் நிச்சயம் வெகு தூரமில்லை !
இவ்வுலகத் தமிழர் கொண்டாடும் விழாவே
இலங்கைத் தமிழர் கண்டிடும் விடியலே !
இன்னுயிர் நீத்த இனமக்கள் பல லட்சம்
இருப்பவர் மனதில் தனிஈழமே லட்சியம் !
இங்குள்ள தமிழரை பணிவோடு கேட்கிறேன்
இனியும் வேண்டாம் பிரிவினை நமக்குள் !
இலக்கைப் புரிந்து இணைவோம் நாமும்
இலங்கைத் தமிழர் வாழ்ந்திட வழிசெய்வோம் !
இங்கும் அங்கும் எங்கும் இணையாத தமிழரால்
இன்றும் என்றும் அழியும் இனமும் நிச்சயம் !
இப்புவியில் பிறந்த தமிழர்கள் நாமெல்லாம்
இதயத்தால் இணைந்து இன்னல்களை தடுப்போம் !
பழனி குமார்