முற்றும் வாழ்க்கை- அஹமது அலி
முற்றோடு
பற்று கொண்டது
வாழ்க்கை!
(*)
முடிவிலியாய்
தொடரவும்
ஆசை!
(*)
ரெட்டையை
தொட்டு வந்த
யாக்கை!
(*)
ஒற்றையை
தொட்ட போது
சேக்கை!
(*)
காற்று
இருக்கையில்
இயக்கம்!
(*)
காற்று
முடிகையில்
மயக்கம்!
(*)
கூடி அழும்
உறவின் முன்
சயனம்!
(*)
காடு போனதும்
முடிந்திடும்
பயணம்.