நீயே நீ
திருடிய கனவுகள் நீ
ஊற்றெடுக்கும் கற்பனை நீ
உறைபனி வெண்மை நீ
உதிருமவள் முறுவலும் நீ
உதிரா அவள் இழமை நீ
சகதியில் பிணைந்த நாற்றும் நீ
அப்புவில் தெறிக்கும் மீனும் நீ
மழலை தொடும் பஞ்சு விரல்கள் நீ
அந்தியவள் வெட்க சிகப்பும் நீ
தூக்கத்திலும் உறங்கா கனவு நீ
மழலைகள் பேசும் மொழிகள் நீ
காதை வருடும் கானம் நீ
நீயே நீ கவியவள் நீயே நீ..........