காலை நாளிதளின் கதை

காலையில் எழுந்தவுடன்
காலைக் கடன்களை எல்லாம் முடித்துவிட்டு
காபியும் கையுமாக
காகித மணி என்னும்
காலை நாளிதழை விரித்தேன்

முதல் பக்கத்திலேயே
முக்கியச் செய்தியாம்
மூன்று பேர் வெட்டு !
முன்னாள் அமைச்சர் மரணம் !
முக்கடல் குமரியில் நேர்ந்ததைப் படித்தேன்

பதறிய மனதோடு
பக்கம் பக்கமாக புரட்டினேன்
பட்டுவாடா செய்யப்பட்ட அரசியல்
பணத்தின் செய்தி படித்தேன்
படபடப்பின் உச்சத்தில் நின்றது
பாவம் என் நெஞ்சு

கனத்த இதயத்துடன்
காபியைக் குடித்துவிட்டு
கட்டுரைகள் எழுதிய
கட்டங்களைப் படித்தேன்
கட்டுரையின் தலைப்பே
கலங்க வைத்தது
காசுதான் கடவுள் என்று

தலைப்பை பார்த்துவிட்டு
தலையில் அடித்துக்கொண்டு
தாளைப் புரட்டத் தொடங்கினேன்

பட்டப் படிப்பு
படித்தவருகுப்
பனி நியமனச் சான்றிதழ்
பாத்து பேர்
பார்க்கும் படி
பத்திரிகையில் அச்சிடப்பட்டிருந்தது

விளம்பரப் பகுதியில்
விசித்திர
விளம்பரங்கள்
வீட்டு மனைகள்
விற்க ! வாடகைக்கு !
விநியோகம் ! நாய் குட்டிகள்

அதனையும் படிக்க
அரைமணி நேரம் ஆனது
ஆயினும்
அதனையும்
அமைதியாகப் படித்தேன்

காலையில்
காலம் போவதே தெரியாது என்பார்
காபி டம்ப்ளரை ! பால்
காய்ச்சிய இடத்தில வைத்து விட்டு
கல்லில் வெந்நீரை ஊற்றியது போல் ! தலை
கால் புரியாமல் ஓடினேன் !

வேலைக்குச் செல்கையில்
வேதனை கொடுத்த செய்தித் தாளின் செய்திகளை
வெறுப்புடன் திட்டிக் கொண்டேன் !
வேறு வேலையற்ற அதன் ஆசிரியருக்கும்
வெடி போல் பாய்ந்தது என் திட்டுக்கள்

திட்டி முடித்துவிட்ட
திருப்தியுடன் அறைக்குள் நுழைய
திடீரென ஓர் உணர்வு ! இவ்வளவு காலம்
திட்டித் தீர்த்த ஆசிரியன் கதியைப் பற்றி

கவலையுறத் தொடங்கினேன்
கவலை எல்லாம் அந்தக்
காலை நாளிதளின் ஆசிரியன்
காயப் படுவான் என்பதே !

அந்த ஆசிரியன் நான் தான் !
அடுத்தவர் நம்மை திட்டும் முன்பு
அவர்களை நாம் முந்திக் கொண்டால்
ஆனந்தம் தான் !

எழுதியவர் : விவேக்பாரதி (2-Nov-13, 11:20 am)
பார்வை : 79

மேலே