உனது பொழுதுக்கான என் பொழுதுஅகன்
எனக்கானதொரு பொழுது
வரும்
உனக்கானதுப் போன்று
அது இரவாய் இருக்கலாம்.......
கனவுகள் காணும் காரியத்தில்
நானும் இருக்கலாம்
அன்றி பகலாய் கூட
ஒரு வேளை இருக்கலாம்......
உறங்கும் இரவுக்கான
தயாரிப்பில் நான் இருக்கலாம்
தயாரிப்புகள்;
மகளுக்கான மணாளன் குறித்து
நித்திரைக்கு முன் அவளோடு ஒரு அலசல்
வெளி நாட்டின் வளச்சிக்கு உழைக்கும்
மகனோடு ஒரு நல விசாரிப்பு புலம்பல்
மனையாளோடு இடைவெளி
அதிகரித்த பொழுதுகளின்
சுருக்கம் குறித்ததாய் ஒரு தழுவல்
பொழுதுகளின் வருகைகளை எவரும்
தடைப்போட்டு செய்ய இயலாது ஒரு மறியல் .....
அன்றியும்
வரும் பொழுதே
எனக்கு காத்திரு
என் கவிதையை முடித்து வருகிறேன்...
கவிதை எது என்பது
பற்றிய ஒரு கவிதை...