ஒளித்திருநாள்
ஒளியே உனக்கோர் திருநாள் !!!!
விழி திறவா மாந்தர் உணரா திருநாள்
வெறியன் வெறியில் ஒழி மூடி
கிடப்பதில்லில்லை இந்நாள்
உறவினன் கூடி விருந்துண்டு
பலகதை பேசி கழிப்பதிலும்,
எண்ணெயில் குளித்து
புத்தாடை அணிவதிலும் இல்லை
பட்டாசு போட்டு காதோடு சேர்த்து
ஓசோனில் ஓட்டை போடுவதிலும்,
மஞ்சள் கலந்த சுண்ணாம்பு காலில்
பூசி மகிழ்வதிலும் இல்லை
அகவிருளாம் அகங்காரம், பொறாமை, தலைக்கனம்உன்னுள் களைந்து
திபமவள் உன்னுள் படரவொரு
விளக்கேற்றி புத்தாடையென்னும்
அன்பை போர்த்திக்கொள் .....