இவை பற்றி எழுது கவிதை --------------அகன்

.
அலைந்து திரி
காமம் எரி
கடலடி தொடு
உணர்வோடு படு
இல்லாதது கொடு

பசுமை விதை
பகைமை புதை

கவிதை சொல்
கழனி செல்
ஊரோடு நில்

பிறமொழி வாங்கு
தன்மொழி ஓங்கு

வல்லமை சேர்
வயோதிகம் பார்

போலி தாக்கு
கனவை இயக்கு
தொடாமை நீக்கு
பிரிவினை போக்கு
மழலைத்தூக்கு

காலம் அள
கனிமம் பிள

நட்பு துதி
தாய்மை மதி
மழையில் குதி
சங்கடம் மிதி

தாய்மொழி வாசி
நேர்மை நேசி
மலர்மணம் சுவாசி

அன்பினில் கரை
ஆணவம் குறை
சமத்துவம் நிறை

மனம் திற
மறதி மற
சுயம் துற

சோகம் கிழி
சோம்பல் ஒழி
லஞ்சம் இழி


..........இவைப் பற்றி கவிதை எழுது
புவி உன்னருகே உன்னை தொழுது..!!!!

எழுதியவர் : அகன் (2-Nov-13, 9:29 pm)
பார்வை : 166

மேலே