காதல் வானவில்லை

காதலின் தோல்வியின்
அடையாள சின்னத்தை
தந்து விட்டாய் -நன்றி
என் கண்ணுக்கும் புரியும்

நீ காதல் சூரியனா ..?
காதல் சூரிய ஒளியா ..?
புரியாமல் தவிர்க்கிறேன்
வார்த்தை சுடுகிறது

காதல் வானவில்லை
கடலில்
வரைய சொல்லுகிறாய்
மிக விரைவாக அழிப்பதற்காக

கஸல் 558

எழுதியவர் : கே இனியவன் (3-Nov-13, 6:43 am)
Tanglish : kaadhal vaanavillai
பார்வை : 94

மேலே