வேண்டாம் தீபாவளி
வேதனை சுமந்த ஈழவர்
விழிநீர் துடைக்கா வுலகும்
சாதனை எனச் சாற்றி
சாத்தான்கள் போடும் கூத்தும்
போதனை செய்தே தங்கள்
பொழுதினைப் போக்கும் நாடும்
ஏதிலி வாழ்வைத் தந்தார்
ஏற்றிடோம் தீபம் இந்நாள்.
பகைகொண் டெழுந்து வந்து
பகைவர் வெல்லத் துனையாய்
சகலதும் செய்து கொடுத்து
சாவினை எமக்கு ஈய்ந்து
சுகமென வாழ்வோர் செத்த
சுபச் செய்தி வரும் நாள்வரை
அகமகிழ் வாடல் தவிர்ப்போம்
அதுவரை இல்லைத் தீபாவளி.
தமிழர் வாழ்விடம் தோறும்
தலைவிரித் தாடும் சூரரைத்
துவைத்தொரு வழி காணா வீணாய்
துள்ளிக் குதித்து மகிழ்வாடி
சுவையுறு பண்டம் செய்து
சுகத்தினை பெறுதல் நீக்கி
தமிழனாய் வாழ்தல் செய்வோம்
தமிழர்க்கு வேண்டாம் தீபாவளி.
பச்சைக் குழந்தையைக் கொன்று
பருவக் குமரியைக் குதறி
இச்சை தீர்த்த இழிநிலை
இலங்கை அரக்கர் சாகனும்
உச்சி முகந்திவரை அரைவணத்து
ஊக்க மருந்திட்டோரும் சாகனும்
அச்சம் தவிர்த்தொருநாள் எழுவோம்
அதுவரை இல்லைத் தீபாவளி.