கலப்பு திருமணம் 555

மலர்...

மனிதன் கலப்பு
திருமணம் செய்கிறான்...

மலர்களும் கலப்பு
திருமணம் செய்கிறது...

ஒரே நாளில்...

மல்லியும் கனகாமரமும்
ஒரே நாரில் சரமாய்...

மனிதன் கலப்பு
திருமணம் செய்தால்...

சாதி பேரை சொல்லி
கொலை செய்கிறான்...

கலப்பு திருமணம் செய்த
மலர் சரத்தையும்...

மாலையில்
தூக்கி எறிகிறான் மனிதன்...

கலப்பு திருமணம் செய்த
மனிதனும் மலரும் ஒன்றுதான்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (3-Nov-13, 8:24 pm)
பார்வை : 318

மேலே