எது நான்

ஏகாந்த அமைதியில்
என்னை நானே
பலமுறை கேட்டுகொள்கிறேன்……
விடை கிடைத்த பாடில்லை!


உள்ளுக்குள்
இரு வேறு முரண்பாடு!
ஒருபக்கம்
நான் நல்லவனா(ளா)ய்………
மறுபக்கம் நானே கெட்டவனா(ளா)ய்…………..


தப்பு செய்யும் போது
எனக்குள் இருக்கும்
நல்லவன்,
பயமுறுத்துகிறான்………….
நல்லது செய்யும் போது,,,,,
கெட்டவன் என்னை
கைகொட்டி கேலி செய்கி றாள்(ன்)


என் மகிழ்வு
அடுத்தவரை ஏதோ ஒருவகையில்
காயப்படுத்துகிறது………….!
என் ரணம்……..
அடுத்தவரின் ஆனந்ததிற்கு
அடிகோலுகிறது………….!


இந்த சங்கிலி
தொடர்பில் பலமுறை
நான் அறுப்பட்டு
வீழ்கிறேன்!
எழ மாட்டேன்…என்கிறபோது
எழுகிறேன்!
எழுவேன்!என நினைக்கும் போது
இன்னும் அதிகமாய் அதிகமாய்
வீழ்கிறேன்…………..!


அடிப்பட்ட ஒருவரை
காப்பாற்ற
நல்ல குணம் என்னை
தூண்டுகிறது………
அடுத்தநொடி
பாதிப்பு வரும் என….
கெட்டகுணம் என்னை
இழுத்துக்கொண்டு போய் விடுகிறது………………..
முடிவில்
அடிப்பட்டவரை விட அதிகமாய்
வலிக்கிறது எனக்கு!


இப்படி எத்தனை எத்தனையோ
அனுதினமும்
முக்கால் உறக்கத்தில்
அதிக வலி தருகிறது
மூளைக்கு…………………!


செய்யும் போது
யோசிக்காமல் செய்த தவறு
செய்த பின்
யோசிக்க வைக்கிறது!
பலமுறை யோசித்து யோசித்து
செய்யும் நல்லது
மீண்டும்
செய்ய முடியுமா?என்கிற கேள்வியுடன்
செய்ய முடியாமலேயே
போய் விடுகிறது!


எந்த ஒரு செயலை
செய்யும் போதும்
என் உள்ளுக்குள் நடக்கும்
முடியும் ,முடியாது
என்கிற போட்டியில்
முடியுமா?என்கிற
பதில்தான் வந்துவந்து போகிறது
ஒவ்வொரு முறையும் !

இருந்தும்,
முடியும் என்று சொல்லிவைக்கிறேன்
முடிக்க முடியும்
என்கிற நம்பிக்கையில்……….!


என்
அக முரண்பாட்டிற்கு
இரு கண்கள்!
நல்லதை பார்க்கும் தீயது!
தீயதை உணர்த்தும் நல்லது!


பலரின் மகிழ்விற்காக
என் இயல்பை தறித்து
வேடம் பூணுகிறேன்!
சில முறை
வேடம் போடுபவரிடம்
என் சுய இயல்பை காட்டி
நிம்மதி கொள்கிறேன்………….!

இது தான்
நான்!
என நிரூபிப்பதில்
சில சமயம்
வெற்றி!
பல சமயம் தோல்வி!


எதுவாகினும்,
யார் என்னை எப்படி
உணர்கிறார்களோ
அப்படியாய் அவர்களுக்குள்
பதிந்து கொள்கிறேன்!

சிலருக்கு நல்லவனாய்!நல்லவளாய்!
பலருக்கு கெட்டவனாய்!கெட்டவளாய்!
இன்னும் சிலருக்கு
இவை கலந்த
இரண்டுமாய்………………………………!

எழுதியவர் : (3-Nov-13, 8:22 pm)
Tanglish : ethu naan
பார்வை : 212

மேலே