மனம்
எண்ணங்களின் கூட்டு, மனம்.
மனம் பிரிந்தால் எண்ணங்கள்.
நீர் திடமானால் பனிக் கட்டி - அதுவே மனம்.
பனிக் கட்டி இளகினால் நீர் - அதுவே எண்ணம்.
நீர் பனிக் கட்டியாகிறது - பனிக் கட்டி நீராகிறது.
ஒன்று இருக்கும்போது ஒன்று இருப்பதில்லை.
மனம் எங்கிருக்கிறது என்று தேடுவது,
இறந்தபின் உடலில் இருந்த உயிர் எங்கே போயிற்று என்று தேடுவதற்கு ஒப்பாகும்.
சாதியில் ஆண் சாதி பெண் சாதி இரண்டு மட்டுமே.
மனசில் நல்ல மனம் கெட்ட மனம் இரண்டு மட்டுமே.

