நண்பனின் வேண்டுகோள்
தேடுகிறேன் தேடுகிறேன்
மனிதத்தை மண்ணிலே !
வாடுகிறேன் வாடுகிறேன்
கண்ணில் காணாமல் !
நாடுகிறேன் நாடுகிறேன்
நாட்டில் உள்ளோரை !
நவில்கிறேன் நவில்கிறேன்
நானும் முடிந்தவரை !
தனியாக தன்னந்தனியாக
வந்திட்டோம் நாமும் !
என்றுமே எவரும் கையில்
எடுத்தும் வருவதில்லை !
சென்றிடுவோம் இங்கிருந்து
வெறுங்கையோடு நாமும் !
நின்றிடும் உன் நினைவும்
நிலையல்ல இவ்வுலகில் !
புரிந்திடுவோம் புரிந்திடுவோம்
புனிதரல்ல புத்தரல்ல நாமும் !
உதவிடுவோம் உதவிடுவோம்
உயிருள்ளவரை நாமும் !
நெஞ்சங்களே நெஞ்சங்களே
நேர்மையாய் வாழுங்கள் !
உள்ளங்களே உள்ளங்களே
உன்மையாய் வாழுங்கள் !
நண்பர்களே நண்பர்களே
பொல்லாப்பும் வேண்டாமே !
அன்பர்களே அன்பர்களே
பொறாமையும் வேண்டாமே !
இனமே நம்மின் இனமே
இனப்பற்றுடன் இருங்களேன் !
தமிழர்களே தமிழர்களே
மொழிபற்றுடன் வாழுங்களேன் !
உயிர்களே அருமை உயிர்களே
அன்போடு பண்போடு வாழுங்கள் !
உலகில் வாழும் மனிதர்களே
நட்போடு நலமோடு வாழுங்கள் !
இதயங்களே இன்னுயிர் இதயங்களே
இயற்கை வளத்தை காத்திடுங்கள் !
இம்மண்ணில் வாழும் மனிதர்களே
இனியேனும் சாதிமதம் மறந்திடுங்கள் !
பழனி குமார்