பொன் மொழிகள் நம் கண்மணிகள் 05

பொய்களால் தடவிக் கொடுப்பதைவிட
உண்மையால் அறைவதே மேலானது.
**********
பிறருக்குப் பயன்படுங்கள்.
பிறரால் பயன் படுத்தப் படாதீர்கள்.
**********
முதிய தலைமுறையைக் குறை சொல்வதை நிறுத்திவிட்டு இளைய சமுதாயத்தைக் குறை சொல்ல ஆரம்பிக்கும்போது உங்களுக்கு நடுத்தர வயது.
**********
முன்னேற்றம் என்பது ''இருப்பதைத் தக்க வைத்துக் கொள்வது தான்'' என்று நினைக்கும் கால கட்டம் தான் முதுமைப் பருவம்.
**********
உங்களுக்கு மூக்கின் மேல் கோபம் வரும்போது,வாயை மூடிக் கொள்ளுங்கள்.
**********

எழுதியவர் : கே இனியவன் (5-Nov-13, 11:47 am)
பார்வை : 112

மேலே