இரண்டாம் அத்தியாயம் -9

முத்துவின் வீட்டில் சம்மதம் கிடைத்துவிட்டது. நிலா அளவில்லாத மகிழ்ச்சியில் இருந்தாள்

"செல்லம் அம்மா சம்மதிச்சிடாங்க எப்ப உங்க வீட்டுல சொல்ல போற "- என்றான் முத்து

"இது நல்ல கதையா இருக்கே நான் என் அத்தைக்கிட்ட சம்மதம் வாங்கிருக்கேன், உங்க மாமா ,அத்தை கிட்ட சம்மதம் வாங்குவது உங்க பொறுப்பு"- என்று பதிலளித்தாள் நிலா

"அதுவுமா சரி வா இப்பவே என் மாமா அத்தைய பாத்து சம்மதம் வாங்கலாம்"- என்றான்

"அட அவசரத்த பாரு அவங்களுக்கு முன்னாடி நீங்க ஒரு முக்கியமான ஆள பாக்கணும் அவர் சம்மதிச்சா போதும் உங்க மாமாவும் அத்தையும் சம்மதம் சொல்லிடுவாங்க"

"அப்டியா யார் அது???"

"அது சஸ்பென்ஸ் , நாளைக்கு ஹோட்டல் அஜெந்தாக்கு வாங்க சொல்றேன்"

"என் செல்லம் இல்ல ப்ளீஸ் டா யாருன்னு சொல்லிடு இல்லனாஎன் தலையே வெடிச்சிடும் ப்ளீஸ்"

"நோ , நெவெர் , நாளைக்கு பாக்கலாம்"

"அட ரொம்ப தான் பிகு பண்ற சரி நாளைக்கே பாக்கலாம் அது யாருன்னு "

இருவரும் சிறிது நேரம் பேசிவிட்டு கிளம்பினார்கள். நிலா நாளை எந்த நேரம் வரவேண்டும் என நியாபக படுத்தி அனுப்பினாள்


மறுநாள் மாலை சரியாக மணி 5.30,

ஹோட்டல் அஜெந்தா முன் தன் பைக்-ஐ நிறுத்தினான் முத்து.

வாசலில் இருந்த காவலன் சலாம் வைத்து கண்ணாடி கதவுகளை திறந்து வைத்தான்

உள்ளே சில்லிடும் ஏசி , ஏதேதோ வெளிநாட்டு முகங்கள் , வெளிமாநில பாஷைகள் தான் வேற உலகிற்கு வந்துவிட்டோமா என்றுக்கூட தோன்றியது முத்துவிற்கு

வரிசையாக ஒவ்வொரு மேசையாக தேடினான்,அப்போது அவன் தோள்மேல் ஒரு கை வந்து விழுந்தது ,,,,,,,,,,,,,,,,,


திடுக்கிட்டான் முத்து, யார் என்று பார்த்தான், 28 வயதுள்ள இளைஞன் நின்றான்

அவன் யாரென்று முத்துக்கு தெரியவில்லை முகம் பழகிய முகமாகவும் இல்லை,,,

"ஹலோ Mr.முத்து ,,, ஹொவ் ஆர் யு???" -என்றான் அந்த புதியவன்

"I'm fine, நீங்க யாருன்னு ,,,,,,,,,,,,,,, ??"

"don't be panic,,,,, வாங்க " - என்று அழைத்து சென்றான்.

தான் எங்கு செல்கிறோம் என்று கூட தெரியாமல் அந்த புதியவனை பின் தொடர்ந்தான் முத்து.

அவன் உள் அறைக்கு கூட்டி சென்றான், அங்கு சிறு சிறு கண்ணாடி பெட்டிகள் போல அறைகள் இருந்தது

பெரிய பெரிய தொழில் அதிபரெல்லாம் தம் தொழில் நண்பர்களுக்கு விருந்தளிக்க அழைத்து சொல்லும் இடம் அது.

உள்ளே தொட்டதெற்கெல்லாம் காசு தான். ஆடம்பர வாழ்வு.

தன்னை ஏன் இங்கு அழைத்து வந்திருக்கிறான் . யார் இவன் என்ற கேள்வியோடு அந்த புதியவனை பின்தொடர்ந்தான் முத்து

அந்த இளைஞன் கடைசி பெட்டிக்கும் நுழைந்தான் . முத்துவையும் அழைத்தான். முத்து உள்ளே சென்ற போது,


"ஹாய் டியர் "

"நிலா"

"எஸ் உங்க நிலா தான் "

"அப்போ இது "

"இது என் அண்ணன் சந்தோஷ்"

முத்துவிற்கு அப்போதுதான் மூச்சே வந்தது. "இவ தன் இப்டினா இவ குடும்பம் மொத்தமும் இப்டித்தான் போல"- என்று மனதிற்குள் நினைத்து கொண்டான்.


"என்ன Mr . முத்து நான் யாரோ என்னவோன்னு பயந்துட்டீங்கள ?" என்றார் சந்தோஷ்

"இல்ல திடீர்னு நீங்க வரவும் எனக்கு ஒன்னும் புரியல " என்று சம்மாளித்தான்

"எங்க அதான் நீங்க பயந்திருக்கீங்கன்னு உங்க முகமே காட்டி கொடுக்குதே" என்றாள் நிலா

சிரித்து கொண்டான் முத்து.

"பேரர் "- என்றார் சந்தோஷ்

" எஸ் சார்"

"என்ன சாப்புடுரீங்க முத்து"

"நிலாக்கு என்ன பிடிக்குமோ அதே ஆர்டர் பண்ணுங்க"

"அட ம்ம்ம் நிலா மாப்ளைய இப்பவே உனக்கு புடிச்சா மாதிரி மாத்திடீயா ?" என்றார் சந்தோஷ்

மூவரும் சிரித்தார்கள். சாப்பிட்டார்கள்

எல்லாமே நலமாகவே போய் கொண்டிருக்கிறது. நிலா அளவில்லாத மகிழ்ச்சியில் இருக்கிறாள்

முத்துவும் தான் ஆனால் அவனுக்குள் ஒரு புது கவலை புகுந்து கொண்டது

என்ன அது ?????????????????????

எழுதியவர் : நிலா மகள் (5-Nov-13, 4:59 pm)
பார்வை : 208

மேலே