கனவு களைந்தது

'கடவுள்' னா - கல் -கண்டிப்பா கடவுள்ன்னு ஒருத்தன் இல்லவே இல்லை என்கிற தன்னுடைய பிரசங்கத்தை எப்படியெல்லாம் பேச வேண்டும் என்று மனதில் அசை போட்டவனாய் தன்னுடைய 25 வருட பழைய டு வீலரில் புறப்பட்டான் நாத்திகனான அல்லாபிச்சை .

வழியில் தன்னுடைய பால்ய சிநேகிதன் பாபுவும் அவன் மனைவியும் மூட்டை முடிச்சிகளுடன் கோயிலில் இருந்து வெளியே வருவதை பார்த்ததும் அவன் வண்டி தானாகவே நின்றது (பெட்ரோல் கூட கொஞ்சம் அளவு குறைவாகவே இருந்தது என நினைக்கிறேன்).

என்னப்பா பாபு... நீ இந்த கோயில் குளம்னு சுத்துரதை இன்னுமா நிறுத்தலை! நீ எல்லாம் எவ்ளோ சொன்னலும் திருந்தாத ஜென்மங்கள் என்று நொந்தவனாய் தன் சட்டைபையில்ருந்து 100 ருபாய் எடுத்து இந்தா செலவுக்கு வச்சிக்கோ என்றான் அல்லாபிச்சை.

இல்லை வேணாம்ப்பா என பாபுவும் அவன் மனைவியும் ஒரு சேர தலையாட்டினார்கள்.

என்ன ரொம்ப வசதியோ என்றான் நக்கலாய் அல்லாபிச்சை!

அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை எனக்கு இப்போ போதுமான வருமானம் கெடக்கிது அதான் என இழுத்தான் ...........பாபு

ஓ.. அதான் பாத்தாலே தெரியுதே புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேரும் கோயில் கோயில்லா போறீங்களா என்றான் மீண்டும் நக்கலாய் அல்லாபிச்சை.

மெல்லிய புன்னகையுடன் பாபு ....
ஞாயித்து கெளமை ... சர்ச்
திங்க .... .பெருமாள் கோயில்
செவ்வா ...சாய் பாபா
பொதன் ....சித்தர் கோயில்
விசாலனும் வெள்ளியும் .... மசூதி
சனி.... சனீஸ்வர பகவான் கோயில் முன்னாடி
என பாபு முடிப்பதற்குள் ...

ஓ... இப்பெல்லாம் டைம் டேபிள் போட்டு போறீங்களா நல்ல முன்னேற்றம் தான் என்றான்
அல்லாபிச்சை .

இல்லைஇல்லை...அங்கெல்லாம் நானும் என்பொஞ்சாதியும் சேர்ந்து தெரு வோர கடை போடுறோம் போதுமான காசு கெடைக்குது என்ற பாபு தொடர்ந்தான் .... போன மாசம் என் மவளுக்கு நல்ல எடத்துல வரன் பாத்து முடிச்சிட்டோம்! என் பையனுக்கு கூட காலேஜ் சீட் கெடச்சிருக்கு! .
வர பொதன் கிழமை என் அம்மாக்கு கண் ஆபரேஷன் பண்ண போறேன் என்றான் பாபு பெருமிதமாய்... அவன் பேச்சில் நம்பிக்கை தெரிந்தது. *****

ஏன்ங்க.... ஏன்ங்க ...விடிஞ்சி இவ்ளோ நேரம் ஆவுது இன்னும் என்ன தூக்கம் என்ற மனைவியின் குரல் கேட்டு ஆழ்ந்த தூக்கத்தில் இருந்து கனவு களைந்து கண் விழித்தான் அல்லாபிச்சை..

சாமான் வாங்க கடைக்கு போகன்னு பணம் கொடுங்க என்றாள்..
என் சட்டை பாக்கெட்ல இருக்கு எடுத்துக்க என்றான் அல்லாபிச்சை.
இரண்டு 100 ருபாய் தாள்களுடன்(அது நேற்று அவன் கடவுள் மறுப்பு பிரசங்கத்தில் கிடைத்த சம்பாத்தியம்) கடைக்கு புறப்பட்டாள் அல்லாபிச்சை மனைவி ஆயுத பூஜைக்கு தேவையான பத்தி, சாம்பிராணி, பழம் மற்ற சாமான்கள் வாங்கி வர.

(அல்லாபிச்சை டூ வீலெர் உள்பட ஆயுத பூஜையில் கலந்து கொண்டது)

கடவுளின் ஆசியுடன்
என் முதல் படைப்பு ....
கண்மணி

எழுதியவர் : கண்மணி (5-Nov-13, 12:25 pm)
பார்வை : 204

மேலே