இரண்டாம் அத்தியாயம் -8

இதுவரை தான் ஆசை பட்டதெல்லாம் நிறைவேற்றி வைத்தவன் தன்னையே தன் வாழ்நாளின் அர்த்தம் என்று எண்ணிருந்தவன். அவனா இப்படி பேசி போவது


நிலாவிற்கு தலையே சுற்றியது. என்ன செய்வதென்றே புரியவில்லை.

இரண்டு வாரங்களுக்கு பிறகு நிலாவிற்கு தேர்வு முடிவு வந்தது. எல்லா பாடங்களிலும் முதலிடம்.


ஆனால் அவள் சந்தோசமாக இல்லை. இந்த இரண்டு வாரங்களாக முத்து அவளிடம் சரியாக பேசுவதில்லை.... காரணம் அன்று அவன் அம்மாவை பார்க்கவேண்டும் என்று சொன்னது.

அவனுடைய இந்த செய்கை அவளை துணுக்குற செய்தது,

அவளுக்கு தேர்வு முடிவு வந்த அன்று , முத்து அவளை அழைத்தான்

"ஹலோ நிலா எங்க இருக்க?"

"வீட்டுல தான்"

"கொஞ்சம் பார்க்குக்கு வாயேன் "- என்றான்

"சரி " சுரத்தே இல்லாமல் சொன்னாள் .

அடுத்த அரைமணி நேரத்தில் அவன் முன் நின்றாள். அவன் ஒரு பைக்-ல் அமர்ந்திருந்தான்.

"ஏறு"- என்றான்

அவளும் ஏதும் கேட்காமல் பைக்-ல் ஏறினாள். பைக் strat செய்தான். அவளும் ஏதும் கேட்கவில்லை , அவனும் சொல்லவில்லை எங்குதான் செல்கிறான்




1 மணி நேர பயணத்திற்கு பின் ஒரு வீட்டின் முன் அவன் பைக்-ஐ நிறுத்தினான்.

"இது யார் வீடு ??"

",,,,,,,,,,,,,,,,,,,,," அவன் புன்னகை மட்டும் செய்தான்.

அவளுக்கு புரிந்து விட்டது,

"இது உங்க வீடு தான!!!!!!"

"............." மீண்டும் புன்னகை மட்டுமே. பின் அவள் காதருகில்,

"Wish you many more happy returns of the day "

அவளுக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை. அப்போதுதான் அவளுக்கு தெரிந்தது தனக்கு பிறந்தநாள் என்று, அவள் பிறந்த நாளுக்கு அவளின் ஆசையையே பரிசாக அளித்தான்

"அன்னைக்கு ஏன் பாக்க கூடாதுனு சொன்னிங்க "

"இன்னைக்கு பாக்கத்தான்" ஒரு குழந்தையிடம் பதில் அளிப்பதுபோல சொன்னான்,

"உங்கள.......ள" அவனை அடிக்க போன சமயம்,

முத்துவின் தயார் வந்துவிட்டார், கையில் ஆரத்தியோடு, நிலா அதை எதிர் பார்க்கவே இல்லை

அவனிடம் " அம்மாட்ட சொல்லியாச்சா"

",,,,,,,,,,,,,,,,,,,," மீண்டும் ஒரு திருட்டு புன்னகை அவனிடம்.

"நீங்க சரியான ஆளு தான்" என்றாள்

வீட்டில் இருந்த வரை நிலாவிற்கு நல்ல உபசரிப்பு, முத்துவிற்கு அவன் அம்மாவை தவிர வேறு யாரும் இல்லை அவர்களே ஒத்துக்கொண்டார்கள், இவர்களின் திருமணத்திற்கு,

பிறகு முத்து நிலாவிற்கு சிவாவை அறிமுகம் செய்துவைத்தான். அவனோ நிலா பற்றி முத்து புலம்பிய எல்லாவற்றையும் அவளிடம் போட்டு கொடுத்தான் ,


மீண்டும் சிவா முத்துவிடம் சொன்னான் , " இதற்கு தானே ஆசைப்பட்டாய் பால குமாரா"

அந்த இடமே சந்தோசத்தில் தள்ளாடியது....

எழுதியவர் : நிலா மகள் (5-Nov-13, 11:48 am)
பார்வை : 218

மேலே