கவிஞனால் முடியும்
பயந்து சாவது பயத்தால் சாவதினும் உன்னதமென பயவைகள் கருதுகின்றன.
மீன்களும் அழுவதில்லை ஒருவேளை அழுதால் அதை எப்படி கண்டுகொள்வது?
தண்ணீரிலிருந்து அவற்றின் கண்ணீரை மாத்திரம் எப்படி தரம் பிரிப்பது?
கவிஞனால் முடியும் அவன் கண்களுக்குப் பாலுக்குள் இருக்கும் வெண்ணெயும் தெரியும்,
விறகில் இருக்கும் நெருப்பும் தென்படும்