ஜூலியன் அசாஞ்சே* !

கையோடு வாளும் நெஞ்சோடு புண்ணும்
கல்லறையில் காண்பதல்ல வீரம்

இணையத்தோடு உளவும் என்றும்
எதேச்சதிகார களவும் கண்டு வீரமாய்

பாமரனும் விழிதுணர நீ
பாருக்கே நல்லது செய்வதால்

உம் பணி தொடரட்டும்
ஊழல் கள்ளபணம் தெரியட்டும்
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் !

* பிறமொழிச்சொல்

எழுதியவர் : . ' .கவி (18-Jan-11, 6:52 pm)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 620

மேலே