எதிரி

இவன் இல்லை,
என்றால்,
நான் இல்லை!

நண்பனை நான்,
நேசிக்கும் அளவிற்கு,
என் எதிரியையும்,
நேசிக்கின்றேன்!

ஆரம்பத்தில்,
என் எதிரி தான்,
எனக்கு குரு,
இன்றோ,
நான் குருவை மிஞ்சிய,
சிஷ்யன் ஆகி விட்டேன்!

இரவும் உறங்குவதில்லை,
என் எதிரி,
என்னை தோல்வி,
அடைய செய்ய,
விளைவு,
காலையில் அவனுக்கு,
கட்டாய உறக்கம்,
எனக்கு என்றுமே வெற்றி,

நண்பன் கூட,
எதிரி ஆகலாம்,
எனவே எதிரியை,
என்றுமே நான்,
நண்பனாக தான்,
நான் பார்க்கிறேன்!!!!!

எழுதியவர் : ஷர்மி karthick (6-Nov-13, 4:17 pm)
சேர்த்தது : கார்த்திக்
பார்வை : 103

மேலே