சேலை கட்டும் பெண்ணை நம்பாதே - மருவிய பழமொழி விளக்கம்

சேலை கட்டும் பெண்ணை நம்பாதே - பழமொழி விளக்கம்

சேல் + ஐ அகட்டும் பெண்ணை நம்பாதே என்பது இந்த பழமொழியின் உண்மையான வடிவம். சேல் என்பது கண் விழியைகுறிக்கிறது.

எப்போதும் விழிகளை பரபரப்பாய் அலைபாய விடும் குணாதிசயம் உள்ள பெண்கள் தப்பான நடத்தையை,குணத்தை கொண்டிருப்பார்கள் ( உள்ளத்தின் கதவுகள் கண் ) .

எனவே அந்த குணமுடைய பெண்களின் குணாதிசயங்களை அவர்கள் கண்ணிலிருந்தே கண்டுபிடித்து விடலாம். அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காக சொல்லப்பட்ட பழமொழி நாளடைவில் திரிந்து இப்படியாகி விட்டது.

எழுதியவர் : படித்தது (6-Nov-13, 5:06 pm)
பார்வை : 837

மேலே