பட்டாசு சாலையில் பாடம்
திபாவளி யன்று
நீ வெடிக்கும்
பட்டாசில் இருப்பது
கந்தகம் என்றா நீனைக்கிறாய்,,, ?
இல்லை,,! இல்லை,,,!..அது என்
உடலும் சதையும்தான்...
பள்ளி செல்லும்வயதில்
நான் மட்டும்
பட்டாசு தொழிற்சாலையில்
பாடம் பையிள்கிறேன்,,,,,!
ஏன் ,,,,,,,,,,?
முதுகில் புத்தகம்
சுமக்கும்வயதில்- நான்மட்டும்
கந்தகம் சுமக்கின்றேன் ,,,!
ஏன்,,,,,,,,,,,?
பாமரன் என்ற காரனத்தால்
என்னவோ தெரியவில்லை ?
எனக்கு மட்டும் -கல்வி
எட்டாத கனியாக உள்ளது....?
மனிதா -உன்
சிறுது நேரஇன்பத்திற்காக
ஏன் ,,,,
என் கல்வியை எரிக்கிறாய் ?
நீ வாங்கும்
ஒவ்வொரு பட்டாசும்
என் போன்றோர்
பாலகர் கல்வியை
அழிக்கிறது,,!
நீ வாங்கமறுக்கும்
ஒவ்வொரு பட்டாசும்
என் போன்றோர்க்கு
அழியா செல்வமாகிய
கல்விக்கனியை
வழங்குகிறது ...!
மானிடா,,,,,
இனியாவது சிந்திப்பாயடா ,,,,,,,,,,,,,,,,,,,,,?
இந்த
பாமர பாலகனின்
குருதிக்குரல்
கேட்கிறதா ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,?