எனது அம்மா வர்ணிக்க வார்த்தை இல்லை
வர்ணனை
என் அன்பே ! எனது தாயே !
உனது முகம்
ஒரு செந்தாமரை .
உனது நெற்றி
ஒரு கோயில் கோபுரம் .
அதி விழும்
சுருள் கூந்தலோ
ஒரு சிற்பி
செதுக்கி வைத்த
சிற்ப்பங்கள் .
உனது புருவம்
அர்ச்சுனன் எய்திய
வில்லை ஒத்தது .
உனது இரு காந்தக்
கண்கள் நான்
கோவிலுக்குள்
நுழையும் வாயில்கள் .
உன் இரு கன்னங்கள்
இறைவனுக்கு படைக்கும்
மாம்பழங்கள் .
உன் கன்னத்தில் விழும்
அழகிய குழியோ
சிவந்த செர்ரிப் பழங்கள் .
உன் செவ்விதழ்
மௌனமாய் இருக்கும் போது
தாமரை மொட்டு . நீ
வாய் திறந்து பேசும் போது
கீழே சிதறிய முத்துக்கள் .
உன் இதயம் ஒரு
ரோஜா மலர் .
அதில் குடிகொண்டு
இருக்கும் வண்டு நான் .
வண்டு எப்போதும்
மலரைத்தான் சுற்றித்திரியும்
என்னை போல ......
உன் இதழ்கள்
எப்போதும் மனமிகுந்த
வார்த்தைகளையே பேசும் .
இவ்வளவுக்கும் பொருத்தமானவள்
தான் என் அம்மா .
அவளே ........ஒரு கோவில்
அந்தக் கோவிலில்
இந்தப் பக்தனுக்கு
இடமுண்டா ???????
அவளிடம் கேட்டு
சொல்வாய் என் உயிரே !
இடமுண்டு என்றால்
இருப்பேன் இறுதி வரை ........
அவளை நினைத்துக் கொண்டு .
இடமில்லை என்றால்
யாசிப்பேன் என் தாயின்
அன்பிற்காக ..........
ஏங்கித் தவித்து !!!!!!!!!!!!!
( அம்மாவின் அன்பிற்காக ஏங்கும் மகனின் கவிதை )