முதிர் கன்னி
நான் பார்த்து பிறந்த குழந்தைகள்
நான் தூக்கி வளர்த்த பிள்ளைகள்
என் கை பிடித்து நடந்த சிறார்கள்
கைக்கோரக்கும் காலமிது
அவர் கைக்குழந்தை தவழும் காலமிது.
தோஷமென்று
மோசம் செய்த
தேசமிந்த தேசம்.என்னை,
அணுவணுவாய் சேதம் செய்த
தேசமிந்த தேசம்!
ஈவிறக்கம் இமியுமின்றி
இகழ்சசி பேசுதே
என்பால் இறக்கம் காட்ட
என் பாலினம் மறுக்குதே!
ஆண்டு எண்ணி ஆண்டு எண்ணி
ஆண்டு மாண்டது
என் மனம் என்னுள் மாண்டது.
கன்னி கழியா
கன்னியென்று புரளிபேசுது,முதிர்
கன்னி நெஞ்சில் புளியக்கறைக்குது,
கண்ணில் நீரறுவி காணத்துடிக்குது
பூபாளம் என் நெஞ்சுக்குழியில் உருளுது.
என் கணவன்
என் கனவா,இல்லை
என் பிழையா?
ஒளவையாக ஆகவேண்டி
அளுத்துப்போகிறேன்
ஆண்டவனோகலியுகத்தின் ஊமையாகிறான்.
- வளர்புரம் யுவராசன்.
முகவரி.
2,கிருஷ்ணன் தெரு,139,காமராசர் சாலை,
ஐசுவர்யம் பிளாட் நம்பர்-A1
கொடுங்கையூர்,சென்னை.