534 காலம் விடை தரட்டும்

காலம் விடை தரட்டும் ---திரு. அகனின்
'எந்த எழுத்தால் ஏற்றம் பெற்றது கரு" என்ற
பாட்டுக்கு எதிர்ப் பாட்டு.:

காலம் மொழிந்தது எப்படியோ
அல்லது என்னவோ?
எனது கவிதைப் பூக்கள்
கதறியதென்னவோ
இப்படித்தான் அல்லது
இவைகளைத்தான்......

நாங்களும்தானே பூக்கள்
தேனீக்கள் ஏன் தங்கள்
முத்தப் பதிவுகளை
நிறுத்திவிட்டன?

நாங்களும்தான் கரைகள்
ஏன் அலைகள்
எங்களை நோக்கி வருவதில்லை?

நாங்கள் மொழியாச்சே!
எப்படி
எப்பொழுது
எழுத்துக்கள் கூடி
மொழியை நீக்கி/விலக்கி
வைத்துவிட்டன!

எங்கள் மொழி
காலம் கடந்ததாகி விட்டதோ?
புரியாத புதிராகிவிட்டதோ?
அல்லது
சத்தியத்தின் கழிவாகி விட்டதோ?

காலம் தேடலை நிறுத்தட்டும்
இதற்கான விடையைப்
பகரட்டும்!

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (8-Nov-13, 1:08 pm)
பார்வை : 107

மேலே