பொன் மொழிகள் நம் கண்மணிகள் 10

வறுமை என்பது பயந்தவரை அடிக்க வரும் போக்கிரி.
ஆனால் அஞ்சாமல் எதிர்த்து நின்றால் அது பயந்த சாது.
**********
தூங்குபவனை எழுப்புவதற்காக பொழுது இருமுறை விடிவதில்லை.
**********
விருதுகளும் பட்டங்களும் சராசரி மனிதனுக்கு சிறப்புச் சேர்க்கின்றன.
உயர்ந்த மனிதனுக்கு தர்ம சங்கடத்தை உண்டாக்குகின்றன.
தாழ்ந்த மனிதரால் அவை களங்கப் படுத்தப்படுகின்றன.
**********
வாய்மை வாசலிலேயே தடுக்கப்பட்டு நின்று விடும்.
பொய்மை இடுக்கு வழியாகக் கூட உள்ளே நுழைந்துவிடும்.
**********

படிப்பில் பிடிப்பு

எழுதியவர் : கே இனியவன் (8-Nov-13, 9:07 pm)
பார்வை : 72

மேலே