பொன் மொழிகள் நம் கண்மணிகள் 09

உழைத்துப் பார் ,அதிர்ஷ்டம் வரும்.
உறங்கிப்பார்,கஷ்டம் வரும்.
**********
நடக்காதவன் கால்களில் சிலந்தி கூடு கட்டும்.
**********
நோயாளிக்கு எப்போதாவது நித்திரை உண்டு.
கடன்காரனுக்கு ஒருபோதும் இல்லை.
**********
அறிவு இருப்பவர்களிடையே கருத்து வேறுபாடு வருவது இயற்கை .
அவர்களுக்கு அறிவு இருக்கிறது என்பதற்கு அதுவே அர்த்தம்.
**********
சொர்க்கம் போவதற்கு நல்லவர்கள் உழைப்பதை விட
நரகம் போக கெட்டவர்கள் அதிகம் உழைக்கிறார்கள்.
**********
ஒருவரை கீழே தள்ளுவதற்காகக் குனியாதே.
கீழே விழுந்தவரை மேலே தூக்கிவிடக்குனி.
**********
இனிமையாக வாழ முடியாதவர்கள்,இனிமையாக வாழ்பவரை வெறுக்கிறார்கள்.அல்லது அவர்களை விட்டு விலகுகிறார்கள்.
**********

படித்ததில் பிடிப்பு

எழுதியவர் : கே இனியவன் (8-Nov-13, 9:05 pm)
பார்வை : 76

மேலே