இரண்டாம் அத்தியாயம் -24

ஹனுமான் அநாதை இல்லம்,

மாலை 5.30 மணி,

முதல் ஆளாய் வந்தான் மதன் , கேட்டை தாண்டி அங்குள்ள கன்னியாஸ்த்திரிகளிடம் நிலாவை பற்றி கேட்டான் மதன்

அங்கிருந்தவர்கள் நிலா இருக்கும் இடத்தை சொன்னார்கள் மதனும் அங்கு சென்று பார்த்தான்

அங்கு இருந்த குழந்தைகளிடம் விளையாடி கொண்டிருந்தாள் நிலா, மதன் அவள் அருகில் சென்றான்

"நிலா மேடம் "

நிமிர்ந்து பார்த்தாள், "எஸ் "

"ஹலோ மேடம் "

"ஹலோ நீங்க யாரு ??"

"என் பேரு மதன் நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்", என்றான் மதன்

"என்கிட்டயா சரி வாங்க ?" - ஒரு மரத்தடிக்கு கூட்டி சென்றாள்

"சொல்லுங்க "

"என் பேரு மதன் மேடம், நான் முத்து சாரோட ஸ்டுடென்ட் "- என்றான்

முத்துவின் பெயரை சொன்னதும் மலர்ந்தாள் நிலா


"முத்து,,,,,,,,,,,,,, முத்துவோட ஸ்டுடென்ட்-ஆ,,,
முத்து எப்டி இருக்காரு நல்ல இருக்காரா?
எங்க இருக்காரு? அவரோட அம்மா எப்டி இருக்காங்க?" - என்றெல்லாம் கேள்விகள் கேட்டாள்

மதன் அவள் முகத்தையே பார்த்தான் அதில் தான் எத்தனை சந்தோசம் மலர்ச்சி

அவள் கேட்ட அத்துணை கேள்விகளுக்கும் விடை அளித்தான்

அவன் முத்துவிடம் நிலாவை அழைத்து போவதாக வாக்களித்தான்

நிலா மிகுந்த மகிழ்ச்சி அடைந்தாள்

அப்போது மதனின் அலைபேசி அழைத்தது, யாரென்று பார்த்தான்.,,,,,,,,


சுந்தர் அழைக்கிறான் என்றது அலைபேசி

"ஹலோ சுந்தர், நான் நிலா மேடத்தை பாத்துட்டேன் டா, நீ எப்ப வர,,, நீ வந்ததும் நாம மேடத்தை சார்-கிட்ட கூட்டிகிட்டு போகலாம் "- என்றான்


மறுமுனையில் உடைந்து அழுதான் சுந்தர்

என்னவாயிற்று????????????????

எழுதியவர் : நிலா மகள் (8-Nov-13, 3:31 pm)
பார்வை : 215

மேலே