இரண்டாம் அத்தியாயம்-23

பூங்காவில் தன்னை அழைத்தது யாரென்று பார்த்தார் முத்து,

அவரை சட்டென்று அடையாளம் கண்டுகொண்டார், அது நிலாவின் அண்ணன் சந்தோஷ்

"நீங்க Mr. சந்தோஷ் தான??" என்றான் முத்து

"ஆமாம் Mr. முத்து எப்டி இருக்கீங்க?''

"இருக்கேன் சார், நீங்க எப்டி இருக்கீங்க"

"நிம்மதியே இல்லாம இருக்கேன் Mr. முத்து "

"என்ன சொல்றீங்க சார்"

"முதல என்ன மன்னிச்சிடுங்க முத்து"- என்றார்

"எதுக்கு சார் மன்னிபெல்லாம்"

"இல்ல முத்து நான் உங்ககிட்ட அப்டி கேட்டுருக்க கூடாது, மறுநாளே உங்கள தேடிவந்தேன் மன்னிப்பு கேட்க ஆனா நீங்க அந்த ஊருலேயே இல்ல, இத்தன வருசமா உங்கள எப்ப பாப்பேன் மன்னிப்பு கேப்பேன்னு காத்துட்டு இருக்கேன் முத்து "- என்றார் கண்ணீருடன்


"நீங்க எதுக்கு சார் மன்னிப்பு கேட்கணும் நான் தான மன்னிப்பு கேட்கணும் நிலாட்ட என்னோட முன் கோபம், பிடிவாதம் எல்லாமே தான் இந்த நிலைமைக்கு காரணம் "-என்றான் முத்து

"உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா முத்து"- சற்று தயக்கத்துடனும் , ஏமாற்றம் அடைந்துவிடக் கூடாதே என்ற எதிர்ப்பார்ப்போடும் கேட்டார் சந்தோஷ்

பதில் சந்தோஷ்-க்கு சாதகமாகவே இருந்தது

"இல்ல சார் நிலாவத்தவிர வேற யாரையும் என்னால கற்பன பண்ணி பாக்க கூட முடியாது"

இதை கேட்ட சந்தோஷ் ஆண்டவனுக்கு ஆயிரம் நன்றிகள் சொன்னார்.

அவர் முகம் சந்தோசத்தில் மலர்ந்தது. முத்துவுக்கு ஒன்றும் புரியவில்லை

"இத்தன வருசமா என் நிலா கல்யாணமே பண்ணிக்காம உங்களுக்காக காத்திருந்தது வீண் போல முத்து, உங்கள அவ நல்ல புரிஞ்சி வச்சிருந்துருக்கா"- என்றார் சந்தோஷ்


"நிலாக்கு இன்னும் கல்யாணம் ஆகல" என்று சந்தோஷ் சொன்னதும் முத்துவின் மனதில் புதைந்து கிடந்த மகிழ்ச்சி புத்துயிர் பெற்றது


அதே நேரம் மாலதி வீட்டில்,


"நிலா மாதிரியே முத்துவும் கல்யாணமே பண்ணிகலையா?''- எண்டு கேட்டாள் மாலதி

"ஆமா மேடம், எங்க சார் இன்னும் நிலாவ தான் நெனச்சிக்கிட்டு இருக்காரு"

"உண்மையான காதல் காலங்கள் தாண்டி வாழும்-ன்னு நான் கேள்வி பட்டுருக்கேன் ஆனா நிலாவும் முத்துவும் அத வாழ்ந்து காட்டிடாங்க,"

"மேடம் அவங்க காதல் இணைசே ஆகணும் ப்ளீஸ் நிலா எங்க இருக்காங்கனு சொல்றீங்களா"

"தினமும் சாயங்காலம் 5.30 மணிக்கு அடையார்ல இருக்குற "ஹனுமான் அநாதை" இல்லத்துக்கு நிலா வருவா நாம அங்க போய் பாக்காலாம்"

"சரி மேடம் "

"என் கார்லயே போலாம்"- என்றாள் மாலதி

"ஒரு நிமிஷம் மேடம் நான் என் friend-க்கு ஒரு போன் பண்ணிட்டு வரேன்"

எழுந்து சென்று மதனை தொடர்பு கொண்டான் சுந்தர்,

சுந்தர் மாலதியை பார்த்ததையும், மதன் நிலாவை பார்த்தது அவள் வீட்டிக்கு வந்ததையும் பகிர்ந்துக்கொண்டார்கள்

மதன் தான் நேரே ஹனுமான் அநாதை இல்லம் வருவதாக கூறினான் , சுந்தர் அலைபேசியை துண்டித்தான்


சுந்தரும் மாலதியும் கிளம்பிய அதே நேரம், நிலா விட்டிலிருந்து மதன், பூங்காவிலிருந்து முத்து மற்றும் சந்தோஷ் "ஹனுமான் அநாதை இல்லைத்தை" நோக்கி வந்தார்கள்

எழுதியவர் : நிலா மகள் (8-Nov-13, 10:40 am)
பார்வை : 191

புதிய படைப்புகள்

மேலே