இரண்டாம் அத்தியாயம்-22

அதே 5 மணி ,

பூங்காவில் அமைதியை தொலைத்து, நிம்மதியை தொலைத்து கண்ணீருடன் உறவாடிக்கொண்டிருந்தார் முத்து.

மனம் பேசியது , "நிலா நீ நல்லா இருக்க சந்தோசமா இருக்க உனக்கு அழகான குடும்பம் இருக்கு ஆனாலும் என்னமோ நீ எனக்கு இல்லங்குற எண்ணம் மட்டும் என்ன கஷ்டப்படுத்துது ம்ம்......... நீ சந்தோசமா இருக்கனும் நிலா,,,,,,

நான் உன்ன நல்லா பாத்துருந்துருப்பேன் நிலா,,,,,,,,, நான் உன்ன விட்டு வந்துருக்க கூடாது நிலா,,,,,,,, உன் அண்ணன் சொன்னத நான் உன்கிட்ட சொல்லிருக்கணும்,,,,,, முட்டாள் மாதிரி கோபப்பட்டேன்,,,,,,,,, இப்போ உன்ன இழந்துட்டேன் ,,,, ஆத்திரத்தோடு எந்திரிக்கிறவன் நஷ்டத்தோட தான் உட்காருவானு சொல்வாங்க நானே அதுக்கு உதாரணமா ஆயிட்டேன்,,,,,,,,, i'm sorry நிலா ,,,,,,,,
I மிஸ் யு நிலா,,,,,,,,,, I லவ் யு நிலா,,,,,,,, still I லவ் யு,,,,,,,," மனம் பொருமியது கண்ணில் கண்ணீர் முடிவில்லாமல்,,,,,,,,,,,,,,,,,

"Mr, முத்து"

யாரது ,,,,,,, சட்டென்று திரும்பி பார்த்தார் முத்து.



அதே நேரம் ,

நிலா கார்டனில் நுழைந்து கொண்டிருந்தான் மதன்.

வாசலில் அயல் நாட்டு செடிகள் அழகு செய்தன

மனதில் நிலாவிடம் கேட்க நிறைய கேள்விகள் வைத்திருந்தான்

"அவங்க என் சார்-ஐ எப்படி மறக்கலாம்"- மனதில் கோபமும் வலியும் நிறைந்திருந்தது

நேரே சென்று calling பெல்லை அழுத்தினான்,

ஒரு பெண் வந்து கதவை திறந்தாள்,

"நிலா "

"அவங்க வெளிய போயிருக்காங்க "

"எப்ப வருவாங்க"

"வர நேரம் தான் நீங்க ??"

"நான் அவங்கள பாக்கணும் ரொம்ப முக்கியமான விஷயம் "

"அப்டியா உள்ள வாங்க "

உள்ளே சென்றான் , அந்த இடத்தில ஒரு தனிமை நிலவியது

அந்த பெண் உள்ளே சென்று காபி தயாரித்து கொண்டுவந்து கொடுத்தான், வாங்கி குடித்தான்
மிகவும் சூடாக இருந்தது காபி இல்லை அவன் மனம்

"நீங்க நிலாக்கு என்ன உறவு ?"

"நான் நிலாவோட சித்தப்பா பொண்ணு"- அப்போது தான் கவனித்தான், சுவரில் ஒரு புகைப்படம் , அதில்,

இந்த பெண், நிலாவுடன் கடற்கரையில் இருந்த அந்த மனிதர் மற்றும் அந்த சிறுவன் முத்து

மதன் கேட்டான்," அந்த போட்டோல இருக்குறது,,,,,,,,,"

"நான் என் கணவர் அப்புறம் என் பையன் முத்து"-என்றாள் அந்த பெண்

"என்ன அது உங்க கணவரா?"- அதிர்ச்சியாக கேட்டான் மதன்

"ஆமா"

"அப்போ நிலாக்கு கல்யாணமே ஆகலையா????"

பிரமிப்பாக கேட்டான் மதன்

எழுதியவர் : நிலா மகள் (8-Nov-13, 10:13 am)
பார்வை : 188

மேலே