இரண்டாம் அத்தியாயம் -21
நிலாவை பார்த்துவிட்டு , மனதில் அமைதியே இல்லாமல் காரில் வந்துகொண்டிருந்தார்கள் மதனும் முத்துவும் ஒருவருக்கொருவர் ஏதும் பேசிக்கொள்ள வில்லை
முத்துவின் மனநிலை என்ன வென்று மதனுக்கு புரிந்தது அதனாலே அவனும் அமைதி காத்தான்
"வண்டிய நிறுத்துப்பா"- சட்டென்று சொன்னான் முத்து
"என்னாச்சு சார் "
"மதன் அங்க பாரு "
முத்து கைக்காட்டிய திசையில் பார்த்தான் மதன்.
"பூங்கா, அங்க என்ன சார்"
"இந்த மாதிரி ஒரு பூங்காலதான் நானும் நிலாவும் அடிக்கடி சந்திச்சிப்போம். இப்ப என்னமோ மனசு சரில்லப்பா அங்க போனும்னு தோணுது , கொஞ்ச நேரம் தனியா இருக்கனும் போல இருக்கு" என்றார் முத்து அவரின் கண்கள் கலங்கி இருந்தது
எத்தனை வயதானால் என்ன இந்த காதல் மட்டும் வலியை குறைத்துக்கொள்வதே இல்லை அதன் பார்வையில் உண்மையாக நேசிக்கும் அனைவரும் ஒன்று தான் அவர்களுக்கு கண்ணீரை அளிப்பதில் காதல் பாரபச்சமே பார்ப்பதில்லை
முத்து காரை விட்டு இறங்கினார் , பூங்காவை நோக்கி நடந்தார் தனியாக,
மதன் கார் டிரைவரிடம், "நிலா கார்டன் எங்க இருக்குன்னு தெரிமா " என்றான்
"தெரியும் சார்"
"அங்க போங்க "
மதன் மனதில் ஒரு உறுதி என்ன ஆனாலும் சரி இவரின் காதல் நிலா-க்கு தெரிந்தே ஆக வேண்டும்
5 மணி மாலதி வீட்டில் ,
"நீங்க தான் மாலதியா ??" ஆச்சர்யத்தில் கேட்டான் சுந்தர்
"ஆமா சரி நீங்க ஏன் நிலா- வ தேடுறீங்க உங்களுக்கும் அவளுக்கும் என்ன சம்பந்தம் "
"எனக்கும் அவங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல ஆனா அவங்களோட சம்பந்த பட்ட ஒருத்தருக்காக தான் நான் அவங்கள தேடுறேன் " என்றான் சுந்தர்
"நிலாவோட சம்பந்த பட்டவரா யார் அது "
"முத்து"- என்றான் சுந்தர்
முத்துவின் பெயரை கேட்டதும் அதிர்ந்தாள் மாலதி
"என்ன முத்துவா?"
"ஆமா மேடம்"
"என்ன சொல்றீங்க?"
முத்து இத்தனை ஆண்டுகளாக காத்திருந்த கதையை சொன்னான் சுந்தர்
மாலதியின் கண்கள் கண்ணீர் சிந்தின