இரண்டாம் அத்தியாயம்-20
நிலாவை பார்த்த முத்துவும் மதனும் ஐஸ் கட்டி போல உறைந்து போனார்கள், அவளை பார்த்த முத்து தன் நிலைக்கூட மறந்து "நிலா,,,,,,," என்று கத்த நினைத்தார்
அந்த சமயம் நிலாவின் அருகில் வந்து நின்ற அந்த மனிதரை பார்த்ததும் அமைதியானார்
அந்த மனிதர் நிலா-க்கு ஐஸ் கிரீம் கொடுத்தார். நிலாவும் அதை சந்தோசமாக வாங்கிகொண்டாள்
அதைப்பார்த்த முத்து-வுக்கு மனம் என்னமோ செய்தது. அந்த சிறுவனிடம் பந்தை கொடுத்து அனுப்பிவைத்தார்
"மதன் வா போலாம் "
"சார் அவங்கள பாத்தாச்சு ஒரேஒரு வார்த்தை பேசிட்டு..........."
மதன் முடிப்பதற்குள்,
"இல்ல மதன் இத்தனை நாளும் அவள் என்னக்கானவள் என்கிற எண்ணத்தோடு இருந்துட்டேன் இப்ப அவ குடும்பத்த சந்திக்கிற சக்தி எனக்கு இல்ல,
அது மட்டும் இல்ல என்னோட காதல் அவ வாழ்க்கையை நிம்மதி இல்லாம பண்ணிடக் கூடாது
ப்ளீஸ் மதன் போலாம் "
மதனுக்கும் அவரின் உணர்ச்சி புரிந்தது. அமைதியாக கிளம்பினான்.
முத்து மட்டும் திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே வந்தார்
அந்த சிறுவன் நிலவிடம் போனான், நிலா அவனை தூக்கிக்கொண்டாள். அவன் எதோ சொல்கிறான்
அவளும் அவன் மழலை பேச்சை ரசித்து அவனுக்கு முத்தமிடுகிறாள்
அதுவரை பார்த்த முத்து பின் திரும்பி விறு விறுவென நடந்தார்
மதன் மனம் நிறைய பாரம்,,,,,,,,,,,,,,,,
மணி சரியாக 4.45,
அண்ணா நகரில் ஒரு வீட்டின் போர்டிக்கோவில் தன் பைக்கை நுழைத்துக்கொண்டிருந்தான் சுந்தர்
வாசலில் நாய் இல்லை, வாட்ச் மேனும் இல்லை
அந்தவீட்டின் முன்புறம் அழகாக இருந்தது, தேக்கினால் செய்யப்பட்ட கதவு இருக்க தாழிடப் பட்டிருந்தது
அழைப்பு மணி தேடி அழுத்தினான் சுந்தர்.
7 வயது மதிக்க தக்க சிறுவன் வந்து கதவை திறந்தான்
"உங்களுக்கு யார் வேணும் "
"இங்க லேடீஸ் யாராவது இருக்கங்களா"
"ஆமா என் அம்மா இருக்காங்க "
"அவங்கள தான் பாக்கணும் "
"அப்டியா சரி உள்ள வாங்க "
உள்ளே நுழைந்தான். மொசைக் தரை நல்ல வசதியான வீடு தான்
"அம்மா பூஜை ல இருக்காங்க இந்தாங்க காபி சாப்டுங்க " என்றான் அந்த சிறுவன்,
இந்த காலத்துல இப்டியும் ஒரு பையனா என்று வியந்தான் சுந்தர்
அவன் உள்ளே சென்று ,"அம்மா உங்கள பாக்க ஒரு அங்கிள் வந்திருக்காங்க, நான் டியூஷன் போறேன் மா " என்று உள்ளே குரல் கொடுத்தான்
"ஓகே அங்கிள் அம்மா இப்ப வந்துருவாங்க, நான் வரேன்" என்று விடைபெற்று கொண்டான்
வீடிற்கு வந்தோரை உபசரிக்கும் பண்பு இந்த தலைமுறைக்காவது இருக்கே என்று நிம்மதி கொண்டான் சுந்தர்
சிறிது நேரத்தில் மெட்டி ஒலி கேட்டது , யாரோ நடந்து வரும் சத்தம்
எழுந்து நின்றான் சுந்தர், ஒரு பெண்மணி வந்தார்
பட்டு புடைவை கண்ணில் கண்ணாடி, நகைகள் என பணக்கார கலை தெரிந்தது அவளின் வயது 35 இருக்கலாம்
"சொல்லுங்க யார் வேணும் "என்றாள் குரலில் பணிவு தெரிந்தது
"நான் சுந்தர் அந்த விளம்பரம் ,,,,,,,,, எனக்கு கால் வந்தது"- என்றான் தயக்கத்தோடு
"ஆமா நான் தான் கால் பண்ணுனேன் நீங்க யாரு நீங்க எதுக்கு நிலாவ தேடுறீங்க " -என்றார் அந்த பெண்மணி
"சொல்றேன் அதுக்கு முன்னாடி நிலாவ உங்களுக்கு எப்டி தெரியும் நீங்க அவங்களுக்கு உறவா?" என்றான் சுந்தர்
"நான் அவளுக்கு தோழி என் பேரு மாலதி" - என்றாள்