கிராமியக் கலை வளர்ப்போர் யாரோ
களைத்த கலை வளர்ந்திடத்தான்
கலைஞருமே வழிவகுத்தார்
கிராமியக் கலை அறிந்தவர்க்கு
சென்னையிலே விழாவமைத்தார்
தைபொங்கல் வந்துவிட்டால்
கிராமிய விழாக் கோலம்தான்
மெரினா சாலையோரம்
மேடைகளில் ஆட்டங்கள்தான்
சென்னையிலே ஆங்காங்கே
கடற்கரை, பூங்காவென்றும்
கல்லூரிப் பள்ளி மைதானத்திலும்
கிராமிய நடனங்கள் எல்லை விரிந்து...
திறந்தவெளி அரங்கினிலே
சென்னை சங்கம திருவிழாவினிலே
கரகாட்டம் ஒயிலாட்டம்
தப்பாட்டம் களைகட்டும்தான்
நாட்டுப்புற பாடலென்றும்
தற்காப்பு கலை நிகழ்வும்
கேட்போர் செவிக்கினிமை அன்றோ
காண்போர்க்கு அருங்காட்சியன்றோ??
தைமாதத்திலே முதல் வாரத்திலே
கிராமியக் கலைஞர்கள் சென்னை வாசம்
கனிமொழியின் கட்டளையில்
பழங்கலைகள் ஆங்காங்கே மணம் வீசும்
நாட்டுப் புற கலைஞருக்கே
ஊக்கமுடன் ஊதியமும்
சென்னை சங்கமத்தில் கிடைத்ததன்றோ
சென்னை சங்கமமும் சென்றதெங்கோ??
தெரியவில்லை??
தமிழகத்தில் எங்கெங்கோ
மறைந்திருந்த கலை கூட்டத்தையே
கரம் பிடித்து இழுத்து வந்தே
கலை வளர்ந்த காலம் எங்கே??
கலை ஞானம் கொண்டவரும்
அரியணையில் இல்லை அன்றோ
அதனால் வந்த துன்பமன்றோ
அரிய கலைகள் அழிதல் நன்றோ??
ஆர் சொல்லி உணரவைப்பார்
கிராமியக் கலை வளர்த்து வைப்பார்
அரசாங்கம் செவிமடுத்தால்
அறிய கலை வாழும் அன்றோ!!!
(திரு அழகர்சாமி சுப்பிரமணியம் அவர்கள் எழுதிய "களையிழந்த கிராமியக் கலை" என்கிற கவிதைக்கான என் கருத்தாக இதனைப் பதிவிடுகிறேன்)