அந்த நாலு பேருக்கு நன்றிஅகன்
"நீ இங்கு சுகமே ,நான் அங்கு சுகமா..?"
-அகத்தியன்
நட்பு சூழ்ந்த வாழ்வு
பூக்கள் சிரிக்கும் சோலைவனம்
அங்கு,
பண்பு பல்லவி பாடும்
அன்பு சுரம் கூட்டும்
உண்மை மணம் பரப்பும்
உதவி நடனமிடும்
உவகை உலா வரும்....
நண்பன் தருவான்
பெற்றோர் தராத பாசம் ,
உற்றார் அளிக்கா உதவி.
சம்சாரம் தீர்க்காத சஞ்சலம்
தீர்ப்பான் நண்பன்
சங்கட ரேகைகளை
சந்தோஷ கோடுகளாய்
மாற்றும் புதிய ஜோசியக்காரன்
நட்பு ஒரு புரியாத புதிர்தான் -
எப்படி,எப்போது நண்பனானோம்...?
இப்படி இந்த வினா
இதயத்தில் வாழ்ந்தால்
நட்புக்கு ஆயுள் அதிகம்...
நட்பு ஓர் அதிசய அனுபவம்தான்-
தப்பைக் கண்ட பிறகும்
கனவுகளாய் நம்முள்ளே..
நட்பில்
மறக்கத்தான் மன்னிக்கத்தான்
தவறுகளும் தப்புக்களும்.....
நண்பனின் உரையாடலில்
கடிகார எண்கள் கடத்தப்படும்
முட்கள் முனகலுடன்
முடங்கிப்போகும்
இரவு வரும்
நிலவு தேயும்
பகலும் ஓயும்
காலம் கரையும்
பேச்சு மட்டும் தொடரும்...!!!