நீயும் நானும்

என் மனதைத் திறக்கிறேன்,
என் மௌனம் கலைக்கிறேன்,
உன்னைக் கண்டதால் மாற்றம்,
அதனால் ஒரு தடு மாற்றம் ,

கனவில் வருகிறாய் ,
நிஜமென்று நினைக்கிறேன்.
நிழலாக வருகிறாய்,
துணையென்று நினைக்கிறேன்.

காதலென்று கைகழுவ விரும்பாது,
கணவனென்று கை பிடிக்க முடியாது,
தகப்பனென்று தலை வணங்க இயலாது,
தனயெனென்று தரம் தாழ்த்த முடியாது.

கண்ணாடியாய் ஒரு உறவு,
அதை கிள்ளவும் முடியாது,
அள்ளி அணைக்கவும் முடியாது,
அதே கணம் தள்ளவும் முடியாது.

நான் யார் என்று கேட்டால்,
உன்னை நான் என்றே சொல்வேன்,
எனக்குள் இருக்கும் உன்னையும்,
சேர்த்தே கண்ணாடி பிரதிபலிக்கும்.

தாகம் தணிய உன்னிடம் வருகிறேன்,
நீயோ எனைத் தீ மூட்டிப் பார்க்கிறாய்,
வறண்ட நிலமாய் நானிருந்தேன்,
அதில் மழை நீராய் வருகிறாய்.

என் வீணையின் நாதமாய் வருகிறாய்,
உன் குரல் என் சுவாசமாக வருகிறது,
களைத்த இதயம் உன்னில் இளைப்பறுகிறது,
கனிவான பேச்சில் களைப்பாறுகிறது.

கரம் பிடித்து வழி நடக்க காலமில்லை,
மார்புக்குள் முகம் புதைக்க ஆசையில்லை,
மடி மீது தலை வைக்க தாயுமில்லை,
மஞ்சத்தில் மதியிழக்க தேவையில்லை.

நான் என்று அணைக்கவும் முடியாது,
நீ என்று விலகவும் முடியாது,
நாமென்று நலமாக வாழ்வோம்,
மனமொத்த கருத்தாக வாழ்வோம்...........!!!!

சஹானா தாஸ் ..........!

எழுதியவர் : சஹானா தாஸ் (9-Nov-13, 9:23 am)
Tanglish : neeyum naanum
பார்வை : 199

மேலே