அலை மகளிடம் அடைக்கலம் கொண்டாயோ தலை மகளே
அலையிழந்து அடங்கியகடல்
ஆடையிழந்து கூடாகிய உடல்
நிலைகுலைந்து நின்றது நீயும்
நீ அவளில்லை.
அவள் நீயில்லை.
எவளில்லை நீ?
எவளென்றாலும்
கறைபடிந்த உள்ளாடையுடன் காத்திருப்பர்.
கூடு கலைந்து ஒடியநாளில்
கைவிடப்பட உயிர்களிடம் எஞ்சியிருந்தவற்றைக்
காவி வந்தவர்கள் எவருமில்லை
படிமங்கள் ஆயிரம்
புனைவுகள் கோடி
போரையும் வாழ்வையும்
சொல்ல முடிந்த கவிஞர்கள் இங்கில்லை.
யாரையும் நோகாது செல்லக் காற்றுக்கு முடியும்;
கண்ணீருக்கு முடியாது.
பெண்ணே நீ நின்ற கடல் சேறானது.
உன்னைக் கைவிட்ட காலம் ஊனமானது.
செய்யாதன செய்த அவன் அரியாசனம்
பற்றி எரிகவென்று அறம்பாடச்
சொல்வறண்டு போன கவிஞனடி நான்.
பொன்னே பொய்வாழுதடி
போடி போன இலட்சம் உயிர்களோடு சேர்ந்து.
காணக் கண்ணில்லா அரசர்களின் காலிடுக்குகளினூடுன்
ஈனக்குரல் கேட்டுக் கொண்டி