என் தோழிக்கொரு கவிதை

நீண்ட நாள் பிரிவிற்கு
பிறகு ஒரு சந்திப்பு
என் உயிர் தோழியுடன்....

இடைவெளியின்றி சிந்திய வார்த்தைகள்..
முடிவின்றி தொடர்ந்த பயணங்கள்...

ரசித்தேன்
என்னோடு பேசுகையில்
அவள் சிதறிய புன்னகையை ...

விரும்பினேன்
அவள் என்னோடு பேசுகையில்
கை கோர்த்து பேசும் அழகு
தொடர வேண்டும் என்று..

பிரமித்தேன்
அவள் என் மீது கொண்ட
அன்பை எண்ணி..

கண்ணீர் கொண்டேன்
என்னை பற்றி கொண்ட அவளது
விரல்கள் என்னை விட்டு நீங்கி
பிரிந்து சென்ற பொழுது..

ஆசை கொண்டேன்
இந்த சந்திப்பு முடிவுற கூடாது என்று..

மனம் விரும்பியது
ஒவ்வொரு நொடியும் அவளுடன்
கழிய வேண்டுமென்று..

இவை அனைத்தும் காதலின்
அறிகுறி என்றால் நானும்
அவளை காதலிக்கிறேனோ என
எண்ணத் தோன்றுகிறது..

ஆம் காதலிக்கிறேன்
என் உயிர்த் தோழியை..
நேசிக்கிறேன் எங்கள் நட்பை..

என்னவென்று சொல்வது அவளை
தோழி என்றா? அல்லது என்
இன்னொருத் தாய் என்றா?

வேண்டுகிறேன்
என்றும் நம் நட்பு தொடர
வேண்டுமென்று...

இதை உன் சந்திப்பால் சிந்திய
கவிதை என்று சொல்வதா? அல்லது
உன் சந்திப்பே கவிதையாய் உரு
கொண்டது என்று சொல்வதா...

எழுதியவர் : சுகி (9-Nov-13, 1:56 pm)
பார்வை : 786

மேலே