ரவுடிகளுக்கும் வெட்கம் வரும்

ரவுடிகளில் பட்டம் பெறாதவர் பலர்
ஆனால் பட்டப் பெயரில்லா
ரவுடிகளே இல்லை!
சூழ்நிலையால் கெட்டு
படிப்பைக் கைவிட்டவர்கள்
ரவுடியாய் வலம் வரும்போது
அவர்களுக்கு மரியாதையே
ஆளுக்கொரு வித்தியாசமான
பட்டப் பெயர்!
இன்று பட்டம் பெற்ற சிலரும்
குறைந்த மதிப்பெண் பெற்று
கல்லூரியில் பட்டவகுப்பில்
குப்பை கொட்டிக் கொண்டிருக்கும்
ஒழுக்கமில்லாத சிலரும்
ரவுடித்தனத்திலும் திருட்டிலும்
களப்பணியில் இருப்பது கண்டு
ரவுடிகள் வெட்கித் தலைகுனிகிறார்கள்.

குறிப்பு: பட்டம்/பட்டயம் பயிலும் சிலரும் பட்டம், பட்டயம் பெற்ற சிலரும் திருட்டிலும் வன்முறையிலும் இறங்குவது பற்றி வெளியாகும் செய்திகளே ஆதாரம்

எழுதியவர் : அன்புமணி செல்வம் (9-Nov-13, 2:26 pm)
சேர்த்தது : Anbumani Selvam
பார்வை : 378

மேலே