வழிகாட்டிச் செல்வது யார்

வழிகாட்ட வேண்டியவர்களே
நெறிதவறிப் போவதனால்
வளர்ந்து வரும் சமுதாயம்
வழி தவறிப் போகிறது!
செயல்களில் சொற்களில்
நல்லதும் கெட்டதும்
சமஅளவில் இருக்கையில்
ஐம்பதில் ஐம்பதைக் கழித்தால்
மிஞ்சுவது எவ்வளவு?
எதைக் கற்றுக் கொள்வார்கள்
இன்றைய இளையவர்கள்?
நல்லதை நாள்முழுக்க
நாவினிக்கச் சொன்னாலும்
ஒருசிலர் மனங்கள்தான்
உள்வாங்கிக் கொள்ளும்.
கெட்டதை ஒருமுறை
கேட்டாலோ, பார்த்தாலோ
படித்தாலோ போதும்
மூளையிலே குடியேறி
அப்பாவி மனதையும்
குப்பையாய் மாற்றிவிடும்.
இலைமறைகாய் நிகழ்வுகளையும்
அவரறிந்து கெட்டொழிய
வழிகாட்டிச் செல்வது யார்?
சிந்திக்கத் தவறிய வழிகாட்டிகளா
இல்லை சிந்திக்க
மறுக்கின்ற இளையோரையா?
தவறில் சரிபாதி இருவருக்கும் தான்.

எழுதியவர் : இரா. சுவாமிநாதன் (9-Nov-13, 11:48 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 124

மேலே